ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ராமியம்பாளையம் ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
சேவூர்
சேவூர்-புளியம்பட்டி செல்லும் சாலையில் சேவூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமியம்பாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தும்பிக்கையாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், நாகதேவி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவில் திருப்பணிகள் நிறைவுபெற்று நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்களை பக்தர்கள் எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ராமியம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்தல். மாலை 6 மணிக்கு, முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி, சாமிபிரதிஷ்டை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜை, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள், கலச புறப்பாடு, கோபுர விமானம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள், தும்பிக்கை ஆழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், நாகதேவி ஆகிய சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தசதானம், தசதரிசனம். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.