ஸ்ரீமகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை விழா


ஸ்ரீமகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை விழா
x

ஸ்ரீமகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீதலையாட்டி சித்தர் ஆசிரமத்தில் ஸ்ரீமகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை நடைபெற்றது. அப்போது உலக நன்மைக்காக கோமாதா பூஜை, 210 மகா சித்தர்கள் யாகம் மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை பாம்பாட்டி சித்தரின் சீடர் ஓங்காரக்குடில் வேலுதேவர் தொடங்கி வைத்தார். தலையாட்டி சித்தர் ஆசிரம நிர்வாகிகள், காப்பீட்டு ஆலோசகர் அசோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் யாக பூஜையில் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் பகவான் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை விழாவும், சமய குரவர்கள் நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பெருமானின் குருபூஜை விழாவும் மகாலிங்க சித்தர் அதிஷ்டானத்தில் நடைபெற்றது.

இதில் கோமாதா பூஜையும், 210 மகா சித்தர்கள் யாகமும் நடைபெற்றது. சிவலிங்கத்திற்கு அபிஷேகங்கள், அலங்கார மகா தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மகா சித்தர்கள் தபோவன நிறுவனர் ரோகிணி ராஜகுமார், மாவட்ட சன்மார்க்க சங்க தலைவரும், அரசு வழக்கறிஞருமான சுந்தரராஜன், இளம் தவயோகிகள் மற்றும் சிவனடியார்கள், ஆன்மிக மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர்.


Next Story