மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் - விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?


மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் - விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
x

காலை 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள கோர்ட்டு தெரிவித்தது.மேலும், இன்று மாலை 6 மனிக்குள் இறுதிசடங்கு நடத்தவும் உத்தரவிட்டது.

கடலூர்,

சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்ற விசாரணையில், மாணவி ஸ்ரீமதி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் வீடியோப் பதிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டில் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்த மாணவியின் பெற்றோர், முதலில் காலை 11 மணியளவில் உடலை பெற்றுக்கொள்ளவதாக தெரிவித்தனர். ஆனால் காலை 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள கோர்ட்டு தெரிவித்தது.மேலும், இன்று மாலை 6 மனிக்குள் இறுதிசடங்கு நடத்தவும் உத்தரவிட்டது.

மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது.

பெரியநெசலூர் கிராமத்தில் வெளிநபர்கள் யாரும் இல்லை. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள், உறவினர்கள் ஆகியோர் மட்டுமே உள்ளனர். முக்கிய சாலையிலிருந்து பெரியநெசலூர் கிராமம் வரை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. எந்தவித இடையுறும் இல்லாமல் மாணவி உடல் நல்லடக்கம் செய்யபட்ட வேண்டும் என்பதே ஐகோர்ட்டு உத்தரவாகும். இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துமாறு கோர்ட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story