ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் - சொர்க்கவாசல் திறப்பு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறக்கும் வைபவம் அமோகம் நடைபெற்று வருகிறது. அதிகாலையில் பக்தி பரவசத்துடன் பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.
சென்னை,
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட உள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றுள்ளார்.
Related Tags :
Next Story