ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் உறியடி திருவிழா


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் உறியடி திருவிழா
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் உறியடி திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் உறியடி திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், பின்னர் அலங்காரம் செய்து காலை 10.30 மணிக்கு தீபாராதனை, சாத்துமுறை தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை முடிந்து, இரவு 7.30 மணிக்கு கிருஷ்ணர் பல்லக்கிலும், சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் தோளுக்கனியானிலும் புறப்பட்டு கோவில் வாசலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சிறுவர்கள் வழக்கு மரத்தில் ஏறி பலகாரம் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி தக்கார் அஜித், உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story