எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x

குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடை தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதையொட்டி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடை தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதையொட்டி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விடைத்தாள்

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 508 மாணவர்கள், 11 ஆயிரத்து 572 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 80 பேர் எழுதினார்கள். தற்போது பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ளது. இதே போல பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 805 மாணவர்கள், 11 ஆயிரத்து 587 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 392 பேர் எழுதினார்கள். இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும், படந்தாலுமூடு சேக்ரட் கார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 827 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 497 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 324 பேர் எழுதினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்னிலையில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் ராமன்புதூர் கார்மல் பள்ளியிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்துக்கான விடைத்தாள்கள் உண்ணாமலைக்கடை சைல்டு ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும் திருத்தப்பட்டு வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு வார காலத்திற்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story