எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்டு 1 மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மறு கூட்டல் தேர்வு கட்டணமாக பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

1 More update

Related Tags :
Next Story