எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி: சிவகங்கை மாவட்டம்2-வது இடம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி: சிவகங்கை மாவட்டம்2-வது இடம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதித்தது.

சிவகங்கை

எஸ்.எஸ்.எல்.சி. ேதர்வு முடிவு நேற்று காலையில் வெளியானது. இதில் சிவகங்கை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதித்ள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் கூறும்ேபாது, "சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்து சாதித்ள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 17,732 பேர் தேர்வு எழுதினர். இதில் 17,294 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் இது 97.53 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் மொத்தம் 278 பள்ளிகள் உள்ளன. இதில் 146 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

மாவட்டத்தில் 138 அரசு பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன, அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story