எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கப்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த இடைநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 435, இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் எண்ணிக்கை 160. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 43. மெட்ரிகுலேஷன் மற்றும் கய நிதி பள்ளிகளின் எண்ணிக்கை 232.

ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற இடைநிலை பொதுத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 443 அதில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 பேர் மற்றும் தேர்ச்சி சதவீதம் 88.27

இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் 18 ஆயிரத்து 768 பேர். மாணவிகள் 18 ஆயிரத்து 675 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 17 ஆயிரத்து 298 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 85.41. மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 92.25.

பள்ளிகள் வாரியாக (அரசு பள்ளிகள்) அரசு, நகராட்சி மற்றும் நலத்துறை பள்ளிகளை சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 166. இதில் 12 ஆயிரத்து 135 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 80.76

தேர்வு எழுதிய மாணவர்கள் 7,531. தேர்ச்சி பெற்றவர்கள் 5,524 தேர்ச்சி சதவீதம் 76.16. தேர்வு எழுதிய மாணவிகள் 7,635 தேர்ச்சி பெற்றவர்கள் 6,611 தேர்வு சதவீதம் 86.28.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 8.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 6,001, தேர்ச்சி பெற்றவர்கள் 5,376 தேர்ச்சி சதவீதம் 88.52 தேர்வு எழுதிய மாணவர்கள் 2,637. தேர்ச்சி பெற்றவர்கள் 2,179. தேர்ச்சி சதவீதம் 83.98

தேர்வு எழுதிய மாணவிகள் 3,364. தேர்ச்சி பெற்றவர்கள் 3,197 தேர்ச்சி சதவீதம் 92.80.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5.

மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள்

மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 16,084. தேர்ச்சி பெற்றவர்கள் 15,352 தேர்ச்சி சதவீதம் 93.55.

தேர்வு எழுதிய மாணவர்கள் 8,600. தேர்ச்சி பெற்றவர்கள் 8,049. தேர்வு சதவீதம் 91.56 தேர்வு எழுதிய மாணவிகள் 7,484 தேர்ச்சி பெற்றவர்கள் 7,303. தேர்ச்சி சதவீதம் 96.01

மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 62.


Next Story