புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி


புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
x

புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

இலுப்பூரில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்கு தந்தைகள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. திருச்சி மறை மாவட்ட முதன்மை அருட்பணி அந்துவான், இலுப்பூர் பங்கின் அருட்பணி தாமஸ் ஜான் பீட்டர், அருட்பணி ஜான் போஸ்கோ, அருட் தந்தையர்கள் இணைந்து கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து நள்ளிரவில் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முதலாவது தேரில் மைக்கேல் சம்மனசும், 2-வது தேரில் ஆரோக்கிய மாதா சொரூபமும், 3-வது தேரில் புனித பதுவை அந்தோணியார் சொரூபமும் என 3 தேர்களில் வீதி உலா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மெழுகுவர்த்தி, மாலை, சாம்பிராணி ஆகியவற்றை காண்பித்து புனித அந்தோணியாரை வழிபட்டனர். இதனை தொடர்ந்து திருப்பலியும், இரவு 7 மணி அளவில் நற்கருணை ஆசீர்வாதமும், புனித அந்தோணியாரின் திருக்கொடி இறக்கமும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story