புனித அந்தோணியார் ஆலய திருவிழா


புனித அந்தோணியார் ஆலய திருவிழா
x

புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி அருட்தந்தையர்களால் புனிதம் செய்து கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் ஆலயத்தை சுற்றி கொடி பவனி நடைபெற்றது. தொடர்ந்து கொடி யேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கொடியேற்பு கூட்டுப்பாடல் திருப்பலி சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து ெகாண்டனர். தொடர்ந்து திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி வரை நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. 30-ந் தேதி அருட்தந்தையர்களால் திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலியும், புனித அந்தோணியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது. 1-ந் தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும், புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியாரின் இறை மக்கள், பங்கு அருள் பணியாளர்கள், கிராம கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story