புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்


புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 2:22 PM IST)
t-max-icont-min-icon

தருவைகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தருவைகுளம் புனிதஅந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டார்,

ஆலய திருவிழா

தூத்துக்குடி தருவைகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு திருப்பவனி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சப்பர பவனி

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து நவநாள் திருப்பலி நடக்கிறது. வருகிற 12-ந் தேதி காலை 5.45 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கோடி அற்புதரின் சப்பர பவனி, தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 13-ந் தேதி காலை 5.45 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.


Next Story