புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
பாளையங்கோட்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, மறையுரை, புனிதரின் மன்றாட்டு மாலை மற்றும் நவநாள் திருப்பலி நடந்தது. 6.30 மணிக்கு தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமை தாங்கி கொடி ஏற்றினார். இதில் பங்கு தந்தை சைமன் செல்வன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.அந்தோணி, ஸ்டீபன், மைக்கேல் கனகராஜ், ராஜா, அருளப்பன், பாஸ்கர், ஜோசப் அன்னராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு அசன விருந்து நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு தேர்பவனி, 23-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணைப்பவனி, 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அசன விருந்து, 25-ந் தேதி காலை 7.30 மணிக்கு பிஷப் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.