அந்தோணியார் ஆலய தேர்பவனி
அந்தோணியார் ஆலய தேர்பவனி
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை தூய இருதய தேவாலயத்தின் காமராஜ் நகர் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு புனித அந்தோணியார் சிறப்பு நவநாள் ஜெபவழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காமராஜ் நகர் பகுதியில் இருந்து தூய இருதய தேவாலயம் வரை தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனி ஆலயத்தை அடைந்ததும் பங்கு குரு மரியஜோசப் தலைமையிலும், உதவி பங்கு குரு இம்மானுவேல் முன்னிலையிலும் குருக்கள் அலெக்ஸ், பிரதீப் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினார்கள். திருப்பலிக்குப்பின்னர் அனைவருக்கும் புனித அந்தோணியார் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது.
இதேபோல் வால்பாறை அருகில் உள்ள முடீஸ் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு குரு மரிய அந்தோணியார்சாமி தலைமையில் சிறப்பு புனித அந்தோணியார் நவநாளும், பாடல் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.-
Related Tags :
Next Story