புனித பாத்திமா மாதா ஆலய தேர் பவனி
புனித பாத்திமா மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
ஆலங்குடி அருகே பாத்திமா நகர் கிராமத்தில் புனித பாத்திமா மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆலய பங்குத்தந்தை அமுல் வில்லியம் கூட்டுப்பாடல் திருப்பலியுடன் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர்பவனி மற்றும் நவநாள் திருப்பலி மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அரசடிபட்டி பங்குத்தந்தை அமுல் வில்லியம், கிராம பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் மேள தாளம், வாணவேடிக்கை முழங்க தேர் பவனி நடந்தது. பின்னர் சிறுமிகளுக்கு முதல் திரு விருந்து நடைபெற்றது. தொடர்ந்து நடந்த தேர்பவனியானது முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட் ச கோதரிகள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.