செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி
பொறையாறு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி
பொறையாறு;
தரங்கம்பாடி தாலுகா பொறையாறு ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 23-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடந்தது. இதில் தங்களது நேத்திக்கடனை நிறைவேற்றும் வகையில் புடவை, இனிப்பு வகைகள், பழங்கள், பல்வேறு வண்ண மலர்கள், வளையல்கள், உள்ளிட்ட மங்கள பொருட்களை சீர்வரிசையாகவும், தென்னங்கன்றுகள், முளைப்பாரி எடுத்தும், குழந்தை வரம் வேண்டியும், திருமணதோசங்கள் நீங்கி நல்ல வரன்வேண்டி சொருபங்களை சப்பரத்தில் தோளில் சுமந்து ஊர்வலம் புறப்பட்டது. ராஜம்பாள் தெருவில் தொடங்கிய இந்த ஊர்வலம் நாடார் காளியம்மன் கோவில், புனித பாத்திமா மாதா கோவில், பெரிய பள்ளி வாசல், தர்காக்கள், கோவில் தெரு, பார்வதி அம்மன் கோவில் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. அங்கு ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் மும்மதங்களை சேர்ந்தவர்களால் புனித கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.