செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி நிறுவன தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாணவி செல்சியா வரவேற்றார். பேராசிரியை அனிதா ரெபேக்காள் பிரார்த்தனை செய்து விழாவை தொடங்கி வைத்தார். மாணவி இந்திரா பைபிள் வாசித்தார். அதனைதொடர்ந்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் நேசமணிகண்டன் பேசினார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஏஞ்சல் எபனேசர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story