நாசரேத் புனித லூக்கா கல்லூரி ஆண்டு விழா


நாசரேத் புனித லூக்கா கல்லூரி ஆண்டு விழா
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் புனித லூக்கா கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியின் 24-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவை நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். விழாவிற்கு தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல 'லே' செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி தாளாளர் செல்வின் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழிற்நுட்ப கல்வி துறை இயக்குனர் காளிதாஸ், திருமண்டல பொருளாளர் மோகன் ராஜ் அருமைநாயகம், பாளையங்கோட்டை சதக் அப்துல்லா கல்லூரி துணை பேராசிரியை சரண்யா, நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை (பொ) ஜுலியட் ஜெயசீலி, ஓய்வு பெற்ற ஆசிரியை விஜயந்திரா, முன்னாள் கல்லூரி ஆசிரியை ஜான்சி செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் பருவத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கல்லூரி அலுவலர் சுந்தரி தொகுத்து வழங்கினார்.

விழாவில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வின், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூஸ், ஓய்வு பெற்ற முன்னாள் மர்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சில்வா மற்றும் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் செல்வின் நன்றி கூறினார்.


Next Story