தூய ஸ்தேவான் பள்ளி ஆண்டு விழா


தூய ஸ்தேவான் பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

சாத்தான்குளம் தூய ஸ்தேவான் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. தூய ஸ்தேவான் தொடக்கப்பள்ளியின் 107-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தச்சமொழி டாக்டர் ஆசீர்வாத மனோகரன் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி வரவேற்றார். பள்ளி தாளாளரும், சேகரகுருவானவருமான கே. செல்வின் மகாராஜா ஆரம்ப ஜெபம் நடத்தினார்.

விழாவில் சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய், துணைத் தலைவர் மாரியம்மாள், புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல், பள்ளி நன்கொடையாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மகாராசன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் சசிகரன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் லட்சுமி நாராயணன், சேகர மன்ற செயலர் வக்கீல் தியோனிஷ் சசிமார்சன், திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் குணசீலன்தங்கதுரை மற்றும் சுடலைமுத்து, அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை யுனைசி நன்றி கூறினார்.


Next Story