புனித சுவக்கீன் அன்னாள் ஆலய திருவிழா கொடியேற்றம்


புனித சுவக்கீன் அன்னாள் ஆலய திருவிழா கொடியேற்றம்
x

திருவாடானை தாலுகா குருலாங்குடி புனித சுவக்கீன் அன்னாள் ஆலய நூற்றாண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா குருலாங்குடி புனித சுவக்கீன் அன்னாள் ஆலய நூற்றாண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை மரிய அந்தோணி தலைமையில் சிவகங்கை மறை மாவட்ட தலைமைச் செயலர் சூசை மாணிக்கம் புனித சுவக்கீன் அன்னாள் திரு உருவம் பொறித்த கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவிழா தொடக்க நாள் திருப்பலியை அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். பின்னர் சிறப்பு மறையுறை நிகழ்த்தப்பட்டது. இதில் குருமிலாங்குடி பங்கு இறைமக்கள் அருட்சகோதரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆலய திருவிழாவில் 14-ந்தேதி அருட்தந்தை மரியலூயிஸ் தலைமையில் சிறப்பு தியானமும் 20-ந் தேதி அன்று மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், புதுப்பிக்கப்பட்ட ஆலயம் மற்றும் பாத்திமா மாதா கெபி அர்ச்சிப்பு விழாவும் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.


Next Story