புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி
புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே அரசடிபட்டியில் புனித வியாகுல மாதா ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முக்கியஸ்தர்களால் தினந்தோறும் புனித வியாகுல மாதா திருஉருவ கொடியேற்று கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் கொடி சுற்றுப்பவனியும் நடைபெற்று வந்தது. நவநாள் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. அரசடிபட்டி அருட்திரு பங்குத் தந்தை அமுல் வில்லியம் தலைமையில் அருட்தந்தையர்கள் திருவிழா ஆடம்பர திருப்பலி பூஜை சிறப்பாக நடை பெற்றது. 9-ம் நாளான நேற்று முன்தினம் தேர்பவனி நடைபெற்றது. மாலையில் திருப்பலி மற்றும் தேர்ப்பவனியும் நடைபெற்றது. இதில் அரசடிபட்டி, பாத்திமா நகர், தவளைப்பள்ளம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தேர்ப்பவனியும், கொடியிறக்கமும் நடைபெற்றது.