மதுபோதையில் மைத்துனருக்கு கத்திக்குத்து


மதுபோதையில் மைத்துனருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே மதுபோதையில் மைத்துனரை கத்தியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). டிரைவர். இவரது மனைவி சரசம்மாள். கடந்த 5-ந் தேதி சரசம்மாளின் வீட்டிற்கு அவரது அண்ணன் வெங்கடராமப்பா (50) வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ஆனந்தன், வெங்கடராமப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தான் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த வெங்கடராமப்பா, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில்உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.


Next Story