கோவில் திருவிழாவில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து


கோவில் திருவிழாவில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தட்சிணாமூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் தனுஷ்குமார் (வயது 20). இவர் மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன் (20) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கார்த்திக் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டு சரவணன் மற்றும் தனுஷ்குமாரை கார்த்திக் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தப்பி ஓடிய கார்த்திக்கை டவுன் போலீசார் கைது செய்தனர்.


Next Story