தக்காளி, அவரைக்கு நிலையான விலை


தக்காளி, அவரைக்கு நிலையான விலை
x

தக்காளி, அவரைக்கு நிலையான விலை

திருப்பூர்

தளி

தக்காளி, அவரைக்கு நிலையான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாகுபடி

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். பருவமழை பெய்யும் போது வானம் அளிக்கும் மழைநீரையும் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவற்றில் ஏற்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்றுப் பாசன முறையில் ஒரு சில விவசாயிகள் புடலை, பாகல், பீர்க்கன், அவரை, அரசாணி, வெள்ளரி, பூசணி உள்ளிட்ட கொடி வகை தாவரங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.அந்த வகையில் தளி பகுதியில் தற்போது அவரை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

சைவ பிரியர்களின் விருப்ப உணவாக திகழ்கின்ற அவரை அபரிமிதமான புரதச்சத்தை உலகுக்கு அளிப்பதுடன் எடையைக் குறைப்பதற்கும் உதவிகரமாக உள்ளது.ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கு சாகுபடி செய்யப்படுகின்றன.அவரை செடி மற்றும் கொடி வகையாக பயிரிடப்படுகிறது. பட்டை கொட்டை சட்டை சிவப்பு நெட்டை சிவப்பு மூக்குத்தி அவரை கோழி அவரை என பல்வேறு வகைகள் உள்ளது.நாட்டு அவரை 120 நாட்களுக்கு முன் செடி அவரை 740 நாட்களுக்கும் பலனளிக்கக் கூடியது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உடலிலுள்ள நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது அதனால் ஏற்படுகின்ற மயக்கம் தலைச்சுற்றல் கை கால் மரத்துப்போதல் உள்ளிட்டவற்றை குணமாக்குகிறது.

பராமரித்தல்

அதுமட்டுமின்றி நார்ச்சத்து மிகுந்த அவரைக்காய் ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச் சிக்கலை தீர்ப்பது உடன் மனஅழுத்தம் மற்றும் சுவாச பிரச்சனை சீராக உதவி புரிகிறது. இதனால் பொதுமக்கள் அவரைக்காயை விரும்பி வாங்கிச் சென்று அன்றாட உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் பூவும் பிஞ்சும் காயுமாக உள்ள செடிகளை பராமரித்து கூடுதல் விளைச்சல் ஈட்டுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றோம் என்று தெரிவித்தனர்.

அன்றாட உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருளான தக்காளி கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும் தக்காளி செடிகளை பராமரிப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

--------------


Next Story