தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்


தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்
x

தொரப்பாடி காமராஜர் நகரில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற கலெக்டர் அறிவுறுத்தினார்.

வேலூர்

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வேலூரில் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக வேலூர் தொரப்பாடி ஜெயில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் மழைநீர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் குட்டை போன்று தேங்கி நின்றது. அந்த இடத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேங்கி நிற்கும் மழைநீரை அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேற்றும்படியும், அங்கு மழைநீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் அங்கிருந்து வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன.

ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி துணை கமிஷனர் சசிகலா, மாநகர் நல அலுவலர் முருகன், தாசில்தார் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story