தபால் தலை கண்காட்சி
தபால் தலை கண்காட்சி நடந்தது.
கரூர்
கரூர் அரசு அருங்காட்சியகத்தில் உலக தபால் தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகத்தில் அக்டோபர் 11-ந்தேதி வரை தபால் தலை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், சுதந்திரம் பெற்ற பின்பு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் மற்றும் பல வெளிநாட்டு அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1,200 தபால் தலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story