முத்திரை பதிக்கும் முத்தான திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


முத்திரை பதிக்கும் முத்தான திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 28 Jun 2023 11:28 AM IST (Updated: 28 Jun 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 5-வது ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், சக்கரபாணி, கீதா ஜீவன், சாமிநாதன், காந்தி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசுத்துறை முதன்மைச் செயலாளர்கள், துறை வாரியான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள், புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Next Story