அகழாய்வில் கிடைத்த முத்திரையிடும் கருவி
சிவகாசி அருகே அகழாய்வில் கிடைத்த முத்திரையிடும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேற்று முத்திரையிட பயன்படுத்திய கருவி கண்டுபிடிக்கப்பட்டது. முன்னோர்கள் பண்டைய காலத்தில் முத்திரையிடும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர் காலத்தில் தபால் துறையில் முத்திரை பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பாகவே சுடு மண்ணால் செய்யப்பட்ட முத்திரையிடும் கருவியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். எந்தெந்த வகையில் இக்கருவியை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்விற்கு பிறகு தெரியவரும் என கூறினர்.
Related Tags :
Next Story