பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x
திருப்பூர்


முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு, கலைத்திறன் போட்டி, விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் எஸ்.குப்புசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜி.வேல்முருகன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் அமைப்பு மற்றும் அரசு பள்ளிக்கு வருடந்தோறும் உதவித்தொகை வழங்கி வரும் கல்வி ஆர்வலர்கள் ஆகியோர்களிடம் இருந்து ரொக்கம் பெற்று, பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் எஸ். கல்பனாஸ்ரீ, எஸ். ஸ்ரீமுகி, கே.ஹரிபிரசாந்த், பி.நிரஞ்சனா, எஸ்.ஜெயஸ்ரீ, எம்.கார்த்திகா, பி.அபிநயா, எஸ்.சந்தியா, எஸ்.கவியரசு, கே.ஜமுனா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம், எஸ்.எஸ்.எல்.சி.யில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள் பி.ஹரிபிரசாந்த், எஸ்.மதன், எஸ்.கவுசிக்சரண் ஆகியோருக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம், 100-க்கு 100 பெற்ற எஸ்.கல்பனாதேவி, பி.நர்மதா, எம்.மைதிலி, எஸ்.கவியரசு ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் எஸ்.கண்மணி, எஸ்.சுமித்ரா, ஜான்சி ஆண்ட்ரியா ஆகியோருக்கு தலா ரூ.1000, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தீபக், பூபதி, விகாஸ்ரீ, நிஷாந்த், சண்முகப்ரியா ஆகியோருக்கு தலா ரூ.1000 என மொத்தம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் வழங்கப்பட்டது.

விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story