ஸ்டார் விற்பனை மும்முரம்


ஸ்டார் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்டார் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் திருச்சபைகள் சார்பில், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் ஆலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதேபோல் கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்டார் (நட்சத்திரம்) விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் (சாண்டா கிளாஸ்) அணிந்து கொண்டு பாடல்கள் பாடியவாறு கிறிஸ்தவ மக்கள் வீடு, வீடாக சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். கூடலூரில் குழந்தை இயேசு, செயின்ட் மேரிஸ் உள்ளிட்ட ஆலயங்களை சேர்ந்த பங்கு மக்கள் வீடுகளில் குழந்தை இயேசு பிறப்பை நினைவுகூறும் வகையில் வண்ண மின்விளக்குகளுடன் குடில்கள் அமைத்து வருகின்றனர்.


Next Story