திருவாரூர் பகுதியில் ஸ்டார் விற்பனை மும்முரம்


திருவாரூர் பகுதியில் ஸ்டார் விற்பனை மும்முரம்
x

திருவாரூர் பகுதியில் ஸ்டார் விற்பனை மும்முரம்

திருவாரூர்

திருவாரூர் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை

கிறிஸ்து பிறந்ததினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டி தொங்க விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆர்வத்துடன் அனைவரும் வாங்கி சென்று ஸ்டார்களில் விளக்கு பொருத்தி வீட்டு வாசலில் அலங்கரித்து வருகின்றனர். இந்த ஸ்டார்கள் ரூ.60 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பேக்கரி கடைகள் தயார்

மேலும் பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் வீடுகளில் இடம் பிடித்தது. விழாவில் முக்கிய இடம் பிடிக்கும் கேக்குகளை வாங்குவதற்கு பேக்கிரி கடைகளில் அதிக அளவில் பதிவு செய்து வருகின்றனர். அனைவரையும் கவரும் வகையில் பல வண்ண டிசைன்களில் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு பேக்கிரி கடைகள் தயார் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட அனைவரும் தயாராக உள்ளனர்.


Related Tags :
Next Story