மாக்கினாம்பட்டி அய்யா வைகுண்டர் கோவிலில் பால் முறை விழா தொடக்கம்


மாக்கினாம்பட்டி அய்யா வைகுண்டர் கோவிலில் பால் முறை விழா தொடக்கம்
x

மாக்கினாம்பட்டி அய்யா வைகுண்டர் கோவிலில் பால் முறை விழா தொடங்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியில் ஸ்ரீமன் அய்யா செல்வ நாராயணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் 12 -வது பால் முறை விழா தொடங்கியது. காலை 6 மணிக்கு அய்யா பள்ளியறையில் சிறப்பு வழிபாடு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அருள்வாக்கு சொல்லுதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக அய்யா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு பூச்சாட்டுதல், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அருள்வாக்கு சொல்லுதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 4 மணிக்கு அய்யா திருவீதி உலா நடக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அய்யாவுக்கு பால்முறை வைபவம் நடத்தி இனிமம் வளங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின், விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி ஜெயபாண்டியன், கிருஷ்ணன் மற்றும் அய்யா வழி பக்தர்கள் செய்துள்ளனர்.

1 More update

Next Story