வாசிப்பு இயக்கம் தொடக்கம்


வாசிப்பு இயக்கம் தொடக்கம்
x

சேத்திருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு இயக்கம் தொடக்கங்கப்பட்டது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி சேத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி சார்பில் நேற்று இப்பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். தினந்தோறும் மதிய உணவுக்குப் பின்பு 1.30 மணி முதல் 2 மணி வரை, அரை மணி நேரம் நடைபெறும் இந்த வாசிப்பு இயக்கத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களுடன் சேர்ந்துகொண்டு செய்தித்தாள்களை வாசித்து கருத்துக்களை தெரிந்து, பின்னர் படித்ததை ஏதாவது ஒரு கருத்தை அனைத்து மாணவர்களுக்கும் சொல்ல வேண்டும். இப்படி தினந்தோறும் இந்த வாசிப்பு இயக்கத்தில் இப்பள்ளி மாணவர்கள் பங்கு கொண்டு பயனடையும் விதத்தில் இந்த வாசிப்பு இயக்கம் தொடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பொது அறிவையும், உலக அறிவையும், விழிப்புணர்வு கருத்துக்களையும் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தெரிவித்தார்.



Next Story