மாநில ஆக்கி போட்டி: சிவகங்கை அணி முதலிடம்
மாநில ஆக்கி போட்டி: சிவகங்கை அணி முதலிடம்
சிவகங்கை
ராஜபாளையம் புளு பாய்ஸ் ஆக்கி கிளப் மற்றும் அம்பேத்கர் ஆக்கி கிளப் இணைந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஆக்கி போட்டியை நடத்தின. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்தப் போட்டியில் பங்கேற்ற சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் அணி சிறப்பாக விளையாடி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதிப் போட்டியில் கோவில்பட்டி இலுப்பை ஊரணி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் கோவில்பட்டி அம்பேத்கர் ஆக்கி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற யங் சேலஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிக்கோப்பை, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story