மாநில கலைத்திருவிழா நிறைவு
மாநில கலைத்திருவிழா நிறைவு
பொள்ளாச்சி
தமிழகம் முழுதும் பள்ளி கல்வித்துறை மூலம் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள 2 தனியார் கல்லூரிகளில் மாநில அளவிலான கலைத்திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. கடைசி நாளன்று ஒயிலாட்டம், பிற மாநில நடன போட்டிகள் நடைபெற்றது. தனி நபர் மற்றும் குழு நடனங்களில் மாணவ-மாணவிகள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதேபோன்று இசைக்கருவி இசைத்தல் போட்டியில் மாணவர்கள் செண்டை மேளம் வாசித்தனர். மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முதலிடம் பிடித்தவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.