மாநில கூடைப்பந்து போட்டி


மாநில கூடைப்பந்து போட்டி
x

அம்பையில் மாநில கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நகர தி.மு.க. மற்றும் தீர்த்தபதி கூடை பந்தாட்ட கழகம் சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. பள்ளி நிர்வாக குழு தலைவர் வக்கீல் செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஓய்வுபெற்ற ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நகரசபை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அரசு வக்கீல் காந்திமதிநாதன், பள்ளக்கால் பஞ்சாயத்து தலைவர் ராம் சந்துரு, நகர வியாபாரிகள் சங்க தலைவர் பண்ணை சந்திரசேகரன், ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் ராஜாமணி, தி.மு.க. இளைஞர் அணி தினகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story