மாநில சிலம்ப போட்டி:கூடலூர் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை-கலெக்டர் பாராட்டு
மாநில சிலம்ப போட்டி:கூடலூர் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை- கலெக்டர் பாராட்டு
நீலகிரி
கூடலூர்
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பவித்ரா, தர்ஷினி, ஹர்ஷா அனுஸ்ரீ ஆகியோர் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் பவித்ரா, ஹர்ஷா ஆகியோர் வயதின் அடிப்படையில் முதலில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றனர். தர்ஷினி மூன்றாம் இடம் பெற்றார். மேலும் அனுஸ்ரீ போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெற்றார்.
போட்டியில் கலந்து கொண்டு சாதித்த பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்த கலெக்டர் அம்ரித் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிலம்பம் கற்றுக் கொடுத்து வரும் வேலாயுதத்தின் முயற்சியையும் வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story