வேளாண் கல்லூரிகளுக்கு இடையே மாநில விளையாட்டுப்போட்டிகள்


வேளாண் கல்லூரிகளுக்கு இடையே மாநில விளையாட்டுப்போட்டிகள்
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 6:46 PM GMT)

கமுதியில் நடந்த வேளாண் கல்லூரிகளுக்கு இடையே மாநில விளையாட்டுப்போட்டிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண்மை கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கோவை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 14 வேளாண்மை கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 14, 15-ந் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள், நேற்று பூப்பந்து, கூடைப்பந்து, மேஜை பந்து, கேரம், எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற போட்டிகளைஅமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக்கல்லூரியின் தாளாளர் அகமது யாசின் தலைமை தாங்கினார். கமுதி தாசில்தார் சேதுராமன், முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் திருவேணி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story