கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான மாநில விளையாட்டு போட்டி; 136 அணிகள் பங்கேற்பு


கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான மாநில விளையாட்டு போட்டி; 136 அணிகள் பங்கேற்பு
x

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான மாநில விளையாட்டு போட்டி; 136 அணிகள் பங்கேற்பு

ஈரோடு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 8-வது ஆண்டாக பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் எச்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். கபடி, கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட பள்ளிக்கூடங்களில் இருந்தும் 1,700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் அடங்கிய 136 அணியினர் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கொங்கு கலை அறிவியல் கல்லூரி மைதானம், கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மைதானம் மற்றும் கொங்கு நேஷனல் பள்ளிக்கூட மைதானம் என 3 மைதானங்களில் 20-க்கும் மேற்பட்ட தனித்தனி ஆடுகளங்களில் தலா 5 நடுவர்கள் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிப்பில் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 2 நாட்களாக தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) அறையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர்.சதீஷ்குமார், முன்னாள் மாணவரும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான ரூபன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் அ.சங்கர் தலைமையில் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.


Next Story