மாநில கபடி போட்டி


மாநில கபடி போட்டி
x

மாநில கபடி போட்டி நடந்தது.

ஈரோடு

மாநில அளவிலான கபடி போட்டி ஈரோடு எல்லப்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த போட்டியில் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, வெள்ளக்கோவில், சேலம், எடப்பாடி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 50 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று இரவு நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 4-வது பரிசு ரூ.7 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story