கலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் - பயன்பெற கலெக்டர் தகவல்


கலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் - பயன்பெற கலெக்டர் தகவல்
x

கலைதிறனை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடத்தபடஉள்ளது. இதில் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுதுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளில் ஒரு பகுதியாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 3 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிகள் மூலம் மாணவர்களுக்கிடையே கலை வடிவங்கள் குறித்து விழிப்புணர்வும், ஊக்கமும் தரும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 9 மற்றும் 10 வகுப்பு வரை இரண்டாம் பிரிவாகவும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பிரிவாகவும் நடத்தப்பட உள்ளது.

பள்ளி அளவில் நடத்தப்படும் போட்டிகளில் (முதலிடம்) வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் (முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்) வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவில் (முதலிடம்) வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மாநில அளவிலான கலை திருவிழா இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இந்த போட்டி அளவில் இன்று 23-ந் தேதி முதல் வருகின்ற 28-ம் தேதி வரை, வட்டார அளவில் வருகின்ற 29-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை, மாவட்ட அளவில் டிசம்பர் 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை மற்றும் மாநில அளவில் 3-1-2023 மற்றும் 9-1-.2023-க்குள் நடத்தப்பட உள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story