மாநில அளவிலான கலைத்திருவிழா; அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை
மாநில அளவில் கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சரப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 38 மாவட்டங்கள் இணைந்து மாநில அளவில் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இந்த கலைத் திருவிழா போட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் ஒப்புவித்தல், தனி நபர் நடிப்பு உள்ளிட்ட போட்டிகளில் அச்சரப்பாக்கத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி திவ்யதர்ஷினி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இதனை பாராட்டும் விதமாக சிறு குரு தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். அப்போது அரசு அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story