மாநில அளவிலான செஸ் போட்டி


மாநில அளவிலான செஸ் போட்டி
x

மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.

திருச்சி

மாநில அளவிலான ஓபன் மற்றும் சிறுவர்களுக்கான செஸ் போட்டி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் திருச்சி, ஈரோடு, சேலம், சென்னை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஆர்.சி.சி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா, போட்டி இயக்குனர் குமாரவேல்நெடுஞ்செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டிகள் 7, 10, 13, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளிலும், ஓபன் பிரிவிலும் நடந்தன. போட்டிகளின் முடிவில் ஓபன் பிரிவில் தூத்துக்குடி வீரர் மிதுன்ஆனந்த் 7 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதில் 7 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஜக்கியா (ஈரோடு), ஆத்விக் (சேலம்), 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பவித்ரா (திருச்சி), கிரிஷோத் (திருச்சி), 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விதுலா (திருச்சி), ஸ்ரீமன் (தஞ்சை), 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் யாகவி (காரைக்குடி), பத்மபிரியன் (திருப்பூர்) ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


Next Story