மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டி
சங்கராபுரம் ஒன்றியத்தில் மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டிக்காக ராஜேந்திரன் என்ற விவசாயியின் வயலில் மக்காச்சோளம் பயிர் அறுவடை நடைபெற்றது. இந்த அறுவடை பரிசோதனை பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, கள்ளக்குறிச்சி மாவட்ட துணை இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை, உதவி வேளாண்மை அலுவலர் செல்வகுமார், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் ஏழுமலை, விவசாய பிரதிநிதி அம்மாசி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை மாநில அளவிலான போட்டி குழுவுக்கு பரிந்துரை செய்வோம். இதேபோல் மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதியில் இருந்து அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் போடிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் சிறந்த முறையில் சாகுபடி செய்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றார்.