மகளிருக்கான மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி


மகளிருக்கான மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி
x

மகளிருக்கான மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது.

கரூர்

புன்னம் சத்திரத்தில் உள்ள சேரன் கல்வி நிறுவன வளாகத்தில் கராத்தே, ஜூடோ வகையை சேர்ந்த மார்சியல் ஆர்ட்ஸ் வகை கலைகளில் பென்கேக் ஸ்லேட் என்ற பெயரில் மகளிருக்கான மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது. பொதுச்செயலாளர் பூவிழி வரவேற்று பேசினார். சேரன் ஹாஸ்டல் (பொறுப்பு) இயக்குனர் சித்ராதேவி தலைமை தாங்கினார். சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் அமுதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேரன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாண்டியன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தங்கல், ரகு, கண்டா, சோலோ, டாண்டிஸ் என 5 பிரிவாக போட்டி நடைபெற்றது. தனித்தனியாகவும், குழுவாகவும் மோதிக் கொண்ட வீராங்கனைகள், போர் கருவிகளை கொண்டு தற்காப்பு கலை செய்து அசத்தினர்.

இதில், சேரன் கல்வி நிறுவனங்களின் ஏ.ஓ வெங்கடேஷ், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச்செயலாளர் மகேஷ்பாபு நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுக்கு தகுதி பெறுகின்றனர்.


Next Story