அரசு வேளாண்மை கல்லூரியில்மாநில அளவிலான விளையாட்டு போட்டி


அரசு வேளாண்மை கல்லூரியில்மாநில அளவிலான விளையாட்டு போட்டி
x

அரசு வேளாண்மை கல்லூரியில்மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, மேசைப்பந்தாட்டம், நீச்சல் மற்றும் தடகளம் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. பெண்கள் பிரிவில் நடைபெற்ற கூடைப்பந்து மற்றும் மேசைப்பந்தாட்ட போட்டியில் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி முதல் இடத்தை பெற்றது. அதனை தொடர்ந்து கைப்பந்து போட்டியில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முதல் இடத்தை பெற்றது. 400 மற்றும் 100 மீட்டர் தடகளப்போட்டியில் வாழவச்சனூர் வேளாண்மைக் கல்லூரி முதல் இடத்தை பெற்றது. தொடர்ந்து ஆண்கள் பிரிவில் நடைபெற்ற 100 மீட்டர் தடகள போட்டியில் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்கல்லூரியும், 1,500 மீட்டர் தடகள போட்டியில் கிருஷ்ணகிரி அதியமான் வேளாண்மைக் கல்லூரியும் முதலிடம் பெற்றது. கைப்பந்தில் டான் போஸ்கோ கல்லூரியும், கால்பந்தில் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியும், மேசைப்பந்தாட்டத்தில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியும் முதல் இடத்தை பெற்றது. முடிவில் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதன்மையர் நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் வன பாதுகாவலர் மூர்த்தி, மகேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர் மன்ற ஆலோசகர் இந்துமதி வரவேற்றார். முடிவில் மாணவி கவிப்பிரியா நன்றி கூறினார்.


Next Story