மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி தொடங்கியது
திருச்சியில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மகளிர் கிரிக்கெட் போட்டியானது டி-20 எனப்படும் 20 ஓவர் போட்டியாக நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் திருச்சி, சென்னை, சேலம், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. முன்னதாக மகளிர் கிரிக்கெட் போட்டியை சி.எஸ்.ஐ. திருச்சி-தஞ்சை பேராயர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். வருகிற 7-ந் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





