மாநில சிலம்பம் போட்டி: காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் சாதனை
மாநில சிலம்பம் போட்டி: காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் சாதனை
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கமும், சிவகாசி ரோட்டரி கிளப்பும் இணைந்து மாநில அளவிலான சிலம்பம் போட்டியை பல்வேறு பிரிவுகளில் நடத்தியது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் ஒற்றைக்கம்பு, அரை கம்பு, அலங்கார சிலம்பம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று பரிசுகளையும், கோப்பைகளையும் பெற்றனர். சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவ, மாணவிகளை கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன், முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story