மாநில நீச்சல் போட்டி
மாநில நீச்சல் போட்டி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் 19 பள்ளிகளை சேர்ந்த சுமார் 200 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயது உட்பட்டோர் என 3 பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் 20 போட்டிகள் நடைபெற்றது. பட்டர்பிளே, முன்னோக்கி செல்லுதல், பின்னோக்கி செல்லுதல், ரிலே மற்றும் நீரில் மூழ்கி செல்லுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story