சத்தியமங்கலத்தில் நடந்த மாநில கைப்பந்து போட்டி:ஈரோடு கொங்கு கல்லூரி அணி முதலிடம்


சத்தியமங்கலத்தில் நடந்த மாநில கைப்பந்து போட்டி:ஈரோடு கொங்கு கல்லூரி அணி முதலிடம்
x

சத்தியமங்கலத்தில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

ஈரோடு

பவானிசாகா்

சத்தியமங்கலத்தில் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 20 கல்லூரி அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இறுதி போட்டியில் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி 25-18, 25-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.. 2-வது இடத்தை சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியும், 3-வது இடத்தை கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியும் பிடித்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story